நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிட்டுக்குருவிகளுக்கான கூண்டினை பொருத்தி ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பினரை ஊக்கப்படுத்தினார். அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளையின் மற்ற செயல்பாடுகளையும் பொறுமையுடன் கேட்டு அறிந்து அதற்கான வாழ்த்துக்களை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அலுவலக அதிகாரிகள் மற்றும் அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பை சேர்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், கார்த்திக், ஜெகன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வோர் உயிர்களிடத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கரிச்சான் குருவியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.
வெட்டுக்கிளிகள் என்றாலே அலறிக்கொண்டிருக்கிறது உலகம். ஆனால், வெட்டுக்கிளிகளுக்கு இவரைக் கண்டால் மரண பயம். வெட்டுக்கிளிகள் மட்டுமல்ல... பருந்து உள்ளிட்ட பறவைகளுக்கும் இவர் என்றால் பயம் தான். இனப்பெருக்க காலத்தில் இவரது எல்லைக்குள் எவரும் நுழைந்து விட முடியாது. அது எவ்வளவு பெரிய ஆளானாலும் இவரது எதிர்ப்பைக் கண்டு தெறித்து ஓடி விடுவார்கள். இந்தப் பாதுகாப்பை நம்பி, மற்ற பறவைகள் இவர் கூடு அருகே தமது கூடுகளை அமைத்துக்கொள்ளும். இவர் தனது இரையைப் பிடிக்கச் செல்லும் அழகே அழகு. ராஜாக்கள் தேரில் பவனி வருவதுபோல், கால்நடைகள்மீது அமர்ந்து பவனி வருவார்.