மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ள காவிரி நீரை பிரதாபராமபுரம் ஏரியில் சேமிக்கும் பொருட்டு சந்திரநதி மற்றும் திருநெல்லிக்காவல் வாய்க்கால்களை தூர்வாருதல் பணிகளுக்காக நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை சார்பில் தூர்வாரும் பணியில் உள்ள JCB எந்திரத்திற்க்கு ஒரு நாளைக்கான எரிபொருள் (diesel) வழங்கப்படடது...
பெரும் முயற்ச்சிக்கு பிறகு நிலத்தடி நீர் இல்லாத சித்தாய்மூர் பள்ளியில் நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை யின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் மூலம் தர்மசிந்தனையாளர்கள் நல் எண்ணத்தினால் தண்ணீர் 500 மீட்டர் தோலைவில் இருந்து நாம் நட்ட 108 மர செடிகளுக்கும் வந்து சேர்ந்தது
இந்த பெரும் முயற்சியில் பங்கேற்ற தர்மசிந்தனையாளர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இறைவன் எல்லா வளங்களையும் அருள வேண்டும்
நாகையை சேர்ந்த திரு.S.P.அகிலன் (Intcom Computers) தனது திருமண நாளை தனது கிராமத்தில் புயலால் விவசாயிகள் குடும்பத்திற்க்கு 130 தென்னங்கன்றுகள் வழங்கி தனது திருமண நாளை பசுமை திருமண நாள் ஆக கொண்டாடினார்.
திரு & திருமதி S.P.அகிலன் அவர்கள் நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நீடித்த இறை அருளுடன் பனையாண்டு வாழ இந்த விவசாயிகள் குடும்பத்துடன் நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்...
2018ம் ஆண்டை வரவேற்கும் விதமாக அருள்மிகு நாகை ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவிலில் 27 நட்சத்திரத்திற்கான மரக்கன்றுகள் நடப்பட்டது.லய நிர்வாக அறங்காவலர் திரு. பழனிசாமி (ASP ஜுவல்லரி) அவர்கள் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். அனைவருக்கும் ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்