கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த வேதாரண்யம் - மறைங்ஞானல்லூர் கிராமத்திற்கு இன்று (12.01.2019) முதற்கட்டமாக நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை 5 அடி உயரம் வளர்ந்த செந்தூரா மா மர கன்றுகள் 1000 குடும்பங்களுக்கு வழங்கபட்டது.
இந்த மரங்களை வேதாரண்யம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.ராம.ஸ்ரீகாந்த் அவர்களும்,
கஜா புயலின் தீவிரத்தையும், வேகத்தையும், கடக்கும் பாதையும் தீர்க்கமாக கணித்து நமக்கு வழங்கிய 'நம்ம உழவன்' திரு. செல்வகுமார் அவர்களும் வழங்கினார்கள்.
இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் உதவிசெய்த அனைத்தும் நல் உள்ளங்களுக்கும், இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நாகப்பட்டினம்
2000 மரகன்றுகள்.... கஜா புயல் புயல் பாதித்த வேதாரண்யம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக நமது ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை இரண்டாம் கட்டமாக ஓரிரு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய ஆந்திராவிலுல்ல ராஜமுந்திரி பகுதியில் இருந்து வரவழைக்க பட்ட 2000 எலுமிச்சை மற்றும் கொய்யா மரகன்றுகள் பொன்னாங்காடு-380, குமரன் காடு-80 மூர்த்தியங் காடு-140, வையாளி காடு-140, கிழ சத்திர கட்டளை-90, மேல சத்திர கட்டளை-80, பச்சையங்காடு-70, சொம நாதர் கோவில்-80, மாகாளி காடு-148, உச்ச கட்டளை-580 ஆகிய இடங்களுக்கு கொடுக்க பட்டது.
இந்த மரங்களின் வளர்ச்சியை கண்கணிக்க நமது ஸ்ரீ அறுபடை- பசுமை சிறகுகள் அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் கண்காணிப்பார்கள்.
வழங்கப்படும் கன்றுகளில் ஏதாவது வளரவில்லை என்றாலோ அல்லது பட்டு போனாலோ பயனாளிகளுக்கு மாற்று கன்றுகள் வழங்கப்படும்.
தன்னார்வலர்கள் அனைவரையும் திரு.அம்பிகா நிதி (தலைமை ஆசிரியர்), ஒருங்கிணைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ஈரோடு IT Association Members மற்றும் PGIMER GAJA RELIEF நட்புகளுக்கும் வழக்கறிஞர் திரு.முத்துகுமர ராஜா அவர்களுக்கும் திருமதி.நீலாயதாட்சி (வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்) திரு.சிவா (பவர் டெக் சிஸ்டம்ஸ்) அவர்களுக்கும் நன்றிகள் பலவற்றை உரித்தாக்குகின்றோம்..