ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை 2014 - ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் நாகப்பட்டினத்தில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு மாதந்தோறும் உணவு வழங்கும் பணியை தொடங்கினோம். நமது அறக்கட்டளையின் மூலம் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து நாகப்பட்டினம் , திருவாரூர் மாவட்டங்களில் இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் செய்து வருகிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூரை அடுத்த ஓணான்குப்பம் மக்களுக்கு நிவாரண பணிகளையும் , சென்னை சைதாபேட்டையில் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு உணவு பொருட்களையும் , சென்னையில் உள்ள முழுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வள்ளி முதியோர் இல்லத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தோம் .சிறந்த கல்வி திறன் கொண்டு குடும்ப சூழ்நிலையால் கல்வியை தொடர இயலாத மாணவர்களுக்கு கல்வியை தொடர எங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம். அதனை தவிர ஆன்மீக ரீதியாக உழவாரப்பணிகளை சதுரகிரி , திருவண்ணாமலை மற்றும் பல இடங்களில் சிறப்பாக செய்து வருகிறோம். ருத்திராட்சம் தேவைப்படும் பக்தர்களுக்கு உலகம் முழுவதும் ருத்திராட்சம் அனுப்பி வருகிறோம். ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையிலும் , இரத்த தானம் செய்யும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு இந்த இணையதளத்தை உருவாக்கி உள்ளோம்.
23, Naduvar East Street
Nagapattinam-611001.
+91 8344448944,
arubadaitrust@gmail.com,
www.trustarubadai.com
Send Your Feedback
Fill out form below and representation will contact you soon